சீனிவாசன்: இது சராசரிப் பெண்ணின் கதை

சேகர் மூவிஸ் தயாரிக்கும் படம் 'நிஜமா நிழலா'. இதில் அகில் குமார், மாளவிகா மேனன், குஷால், கவிஞர் நந்தலாலா, அசோக் பாண்டியன், தீபா இன்னும் பலர் நடிக்கின்றனர். என்.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, சுபுசிவா இசையமைத்துள் ளார். கபிலன், இளையகம்பன் இருவரும் பாடல்களை எழுதி யுள்ளனர். எஸ்.சேகர் தயாரிக் கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் பி.வி. சீனிவாசன்.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப்படங்களில் ஏற் கெனவே ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய அனுபவம் உள்ள வர். இப்போது இயக்குநராகவும் அறிமுகமாகிறார். "தாய், தந்தை சகோதரன் மூவரையும் காப்பாற்ற வேலைக் குச் சென்று சம்பாதிக்கும் சராசரிப் பெண்ணின் கதை இது. மாளவிகா மேனன் இந்தக் கதா பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துவார் என்பதால்தான் அவரை ஒப்பந்தம் செய்தோம். "நீதி, நேர்மையுடன் நியாயமாக வாழவேண்டும் என்று நினைக் கிறாள் கதாநாயகி. ஆனால் இதன் பொருட்டு சமுதாயத்தில் பல்வேறு பிரச்சினைகளை அவள் எதிர்கொள்ள நேரிடுகிறது.

"பல அவமானங்களையும் சந்திக்கிறாள். எனினும் அவை அனைத்தையும் சமாளிக்கும் பக்குவம் அவளுக்கு உண்டு. அதனால் தனது இலக்கை நோக்கித் தைரியமாக நடைபோடு கிறாள். "கதாநாயகியின் இந்தச் செயல்பாடு ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது குலுமணாலி, டெல்லி, பாண்டிச்சேரி, சென்னை, ஒகே னக்கல், சேலம், தர்மபுரி ஆகிய இடங்களில் காட்சிகளைப் படமாக்கி உள்ளோம் என்றார் இயக்குநர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!