இயக்குநர் பாரதிராஜா நடித்து, இயக்கப் போகும் புதிய படம் 'குற்றப் பரம்பரை'. இப்படத்தின் பூசை உசிலம் பட்டியில் நடைபெற்றது. இதில் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் பலரும் கலந்து கொண்டு பாரதிராஜா வுக்கு தங்க ளுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர். வேல ராமமூர்த்தி எழுதிய கதையை மையமாக வைத்து இயக்குநர் பாலாவும் இரத்தினகுமாரும் கூறிய கதையை மையமாக வைத்து இயக்குநர் பாரதி ராஜாவும் 'குற்றப்பரம்பரை' என்ற தலைப்பில் படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இப்படம் குறித்து இயக்குநர் பாலா இதுவரை எந்தவொரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இந்நிலையில், 'குற்றப்பரம்பரை' படத்துவக்க விழாவில் இயக்குநர் பாரதிராஜா ஆணித்தரமாக சில தகவல்களைப் பதிவு செய்தார். "இது குற்றப்பரம்பரை அல்ல. குற்றம் சுமத்தப்பட்ட பரம்பரை. தாய்ப் பால் குடித்து வளர்ந்ததை எப்படி மறக்க முடியாதோ, அதேபோல் நான் வளர்ந்த அந்நாட்களின் நினைவுகளை மறக்க முடியாது. கைரேகைச் சட்டத்தை எதிர்த்து 1920ஆம் ஆண்டு இறந்த மாயக்காள் உட்பட 16 பேரின் படுகொலையைத்தான், இந்தக் 'குற்றப் பரம்பரை' சினிமா மூலம் சொல்ல இருக்கிறேன். இது என் மக்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.
'குற்றம்பரம்பரை' படத்தின் தொடக்க விழாவில் பாரதிராஜா