'குகன்' திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அழகப்பன்.சி. இவர் தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற 'வண்ணத்துப்பூச்சி' படத்தை இயக்கியவர். 'குகன்' படத்தின் நாயகனாக நடன இயக்குநர் ரகுராம், கலா குடும்பத்தில் இருந்து அறிமுக மாகிறார் அரவிந்த் கலாதர். இவ ரும் நடனத்தில் அசத்தியுள்ளா ராம். நாயகியாக கேரளாவைச் சேர்ந்த நேத்ரா அறிமுகமாகி உள்ளார். யதார்த்தமான காதல் கதையின் பின்னணியில் இன்றைய முக்கியத் தேவையான இயற்கை விவசாயத்தின் அவசி யத்தை கதைக்களமாக அமைத் துள்ளார் அழகப்பன்.
இயற்கை விவசாயத்தை தனது உயிர் மூச்சாகக் கொண்டுள்ள திருநெல்வேலி ராஜா அய்யாவுக்குச் சொந்தமான நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட, சிங்கத்தாகுறிச்சி என்ற இடத்தில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதாம். "மோகனப் பிரியா, ஒவியர் அரஸ் இருவரும் கதாநாயகனின் பெற்றோராக நடித்துள்ளனர். அரஸ் படத்திலும் கூட ஒவியராகவே நடித்துள்ளார்.
'குகன்' படத்தின் ஒரு காட்சியில் அரவிந்த் கலாதர், நேத்ரா