100 பேய்கள் மிரட்டும் ‘ஜித்தன்-2’

மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 'ஜித்தன்' ரமேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜித்தன்-2'. திகில் பட வரிசையில் உருவாகி யுள்ள இப்படத்தில் 'ஜித்தன்' ரமே‌ஷுக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்க, இயக்குநர் வின்சென்ட் செல்வாவின் சிஷ்யர் ராகுல் பரமகம்சா இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார்.

"10 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற 'ஜித்தன்' படத்தின் தொடர்ச்சி தான் இப்படம்! இதில் சிருஷ்டி டாங்கேவுக்குப் பேய் வேடம். அவரால் எனக்கு என்ன பிரச்சினை வருகிறது என்பது தான் படம். இது முழுநீள நகைச்சுவை, திகில் படம். "புதிய வீடு வாங்கி அதில் வாழ ஆசைப்படும் என்னை பேய் எப்படி விரட்டுகிறது என்ற விஷயத்தை வின்சென்ட் செல்வா மாறுபட்ட வகையில் திரைக்கதை யாக அமைத்திருக்கிறார்.

"இப்படத்தின் உச்சக் கட்ட காட்சியில் கிட்டத்தட்ட 100 பேய்களுடன் நான் போராடுவதாக அமைந்துள்ள காட்சி படம் பார்ப்ப வர்களைச் சீட்டின் நுனிக்குக் கொண்டு வரும் வகையில் படு விறுவிறுப்பாகப் படமாக்கியிருக் கிறார்கள். இதுவும் ஒரு பேய்ப் படம் என்றில்லாமல், ரசிகர்களுக்கு மாறுபட்ட ஒரு அனுபவத்தைத் தரும் விதமாக 'ஜித்தன்-2' இருக்கும்," என்றார் ரமேஷ். 2016-04-09 06:00:32 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!