‘நான் அப்படி சொல்லவில்லை’

தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது இந்தி சினிமாவையும் கலக்கி வந்த நடிகை அசின் அண்மையில், மைக்ரோ மேக்ஸ் அதிபர் சர்மாவை திருமணம் செய்துகொண்டார். அதோடு, திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அவர் மீண்டும் நடிக்கப் போகிறார் என்று செய்திகள் பரவ ஆரம்பித்தது. அப்போது, "என்னை பற்றி தவறான செய்திகள் வருகிறது. திருமணத்துக்கு முன்பே நான் நடிக்க வேண்டிய படங்களை நடித்துக் கொடுத்துவிட்டேன்.

இனி சினிமாவிலோ, விளம்பரத்திலோ நடிக்கும் எண்ணம் இல்லை," என்று அசின் கூறியதாக ஓரிரு நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து தனது வலைப்பக்கத்தில் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார் அசின். "என்னை பற்றி இன்னும் தவறான செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. நான் இனிமேல் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லவில்லை. தற்போது என் குடும்ப வாழ்க்கையில் நான் கவனம் செலுத்தி வருவதால் இப்போதைக்கு நடிக்கவில்லை," என்றுதான் கூறியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!