‘மீண்டும் ஒரு காதல் கதை’

ரசிகர்களைக் கவர வருகிறது 'மீண்டும் ஒரு காதல் கதை' மலையாளத் திரையுலகில் வெற்றிபெற்ற படம் 'தட்டத்தின் மறையத்து'. இது தமிழில் 'மீண்டும் ஒரு காதல் கதை' என்ற பெயரில் மறுபதிப்பு செய்யப்படுகிறது. அறிமுக நாயகன் வால்டர் பிலிப்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மலையாளத்தில் நடித்த இஷா தல்வார் இதிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவரது இசையில் பாடலாசிரியர் அருண் காமராஜ் எழுதிய 'மைபோட்டு மைபோட்டு' எனும் பாடல் வெளியாகி உள்ளது. இது திருமணச் சடங்கின் போது பாடப்படும் பாடலாக அமைந்துள்ளது.

இப்பாடலில் நிறைய பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். 'ஆடுகளம்' படத்தின் 'ஒத்த சொல்லால' பாடல் புகழ், வேல்முருகனும் இந்தப் பாடலைப் பாடியவர்களுள் ஒருவர். இது அவரது முதல் மெலோடிப் பாடலாம். இந்தப் பாடலுக்கு நடன இயக்குநர் பிருந்தா நடனம் அமைத்திருக்கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!