'தெறி' படத்தின் நாயகி, விஜய்யின் செல்ஃபி பேபி, சமந்தா எப்போதுமே அழகுதான். அவரைப் பார்த்ததுமே 'ரொம்ப அழகா இருக்கீங்களே.... என்ன ரகசியம்?" எனக் கேட்டுக் கேள்வியை ஆரம்பித்தால்... வெட்கப் பட்டுச் சிரிக்கிறார். "உண்மையாகவே அழகா இருக் கேன்ல. என் ஒப்பனையாளரும் ஒளிப் பதிவாளரும்தாங்க என் அழகு ரகசி யத்துக்குக் காரணம். அவங்க தான் என்னை அழகா காட்டுறாங்க. அவங்களுக் குத்தான் இந்தப் பெருமை எல்லாம் போகும்," எனச் சிரிக்கிறார். "தெறி படத்தில் நான் விஜய்க்கு மனைவி. காதல் காட்சிக்குப் பஞ்சமே இருக்காது.
அவ்வளவு நெருக்க மாக நடிச்சு இருக் கோம். ஒவ்வொரு காட்சியிலும் காதலை சும்மா தெறிக்கவிட்டு இருக்கோம். எனக்கே என்னைப் படத்தில் பார்க்கும்போது அவ்வளவு பிடிக்குது!" 'தெறி' படப்பிடிப்புத் தளத்தில் விஜய் கூட நடந்த கலகல சம்பவங்கள் நிறைய இருக்குமே? "இரவில் படப்பிடிப்பு நடக்கும்போது விஜய் சாப்பிடவே மாட்டார். எல்லாமே சரியாக முடிஞ்சதுக்குப் பிறகுதான் சாப்பிடுவார். ஆனால், என்னால பசி தாங்க முடியாது. மீன், கோழின்னு வெளுத்துக் கட்டிடுவேன். ஒரு நாள் இரவு படப்பிடிப்பில் இதைத் தெரிஞ்சு கிட்ட விஜய் சாரும் அட்லீயும் ரொம்பவே கலாய்ச்சாங்க. அன்னைக்குச் சிரிச்ச துல எனக்கு கண்ணுல தண்ணியே வந்திருச்சு!''