விக்ரம் பிறந்த நாளில் வெளியானது ‘இருமுகன்’ முன்னோட்டம்

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் 'இருமுகன்'. இப்படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இதில் விக்ரம் ஜோடியாக நயன்தாரா, நித்யா மேனன் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இப்படக்குழுவினர் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சிறப்புப் பரிசு கொடுத்துள்ளனர்.

60 விழுக்காடு படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளை விக்ரமின் பிறந்த நாளான நேற்று வெளியிட்டுள்ளனர். விக்ரமின் பிறந்த நாளுக்காக வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்று 'இருமுகன்' படக் குழுவினர் முடிவு செய்தனராம். இதையடுத்து, படத்தின் முன்னோட்டக் காட்சிகளை வெளியிடலாம் என்று முடிவெடுத்து குறுகிய காலத்தில் அதை தயார் செய்துள்ளனர். ஒரு நிமிடம் ஓடக்கூடிய இம்முன்னோட்டத்தில் இப்படம் எந்த மாதிரியானது என்பதையும் ரொம்ப நேர்த்தியாக விவரித்திருக்கிறார்களாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!