‘வீர சிவாஜியில் விக்ரமுடன் ‌ஷாமிலி

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிக்கும் படம் 'வீர சிவாஜி'. இதில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஷாமிலி நடிக்கிறார். இவர்களுடன் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகிபாபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குநர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். சுகுமார் ஒளிப்பதிவை கவனிக்க டி.இமான் இசையமைத்துள்ளார்.

கதை, திரைக்கதை எழுதி இயக்குபவர் கணேஷ் விநாயக். அதிரடி சண்டைக் காட்சிகளுடன் குடும்பப் பொழுதுபோக்கு படமாக உருவாகிறதாம். இதில் ஷாமிலி நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. அது மட்டுமல்ல, அவரது கதைப்படி படத்தில் அவரது பெயர் அஞ்சலியாம். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'அஞ்சலி' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் ஷாமிலி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விக்ரம் பிரபு வாடகைக்கார் ஓட்டுநராக நடிக்கிறார். புதுவையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் இடைப்பட்ட பயணத்தில் நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் கதையாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!