தமிழ் நடிகைகளைப் புறக்கணிப்பதேன்: பிரியங்கா

தமிழ் நடிகை­களை, தமிழ்ப் பேசும் நடிகை­களைத் திரை­யு­ல­கி­னர் புறக்­க­ணித்து வருகிறார்கள் என வேதனையை வெளிப் படுத்தியுள்ளார் இளம் நாயகி ஸ்ரீபி­ரி­யங்கா. 'கங்காரு', 'வந்தா­மல', 'கோடை மழை' போன்ற படங்களில் நாய­கி­யாக நடித்­த­வர் பிரி­யங்கா. இப்­போது 'சாரல்' படத்­தில் நாய­கி­யாக நடித்­துள்­ளார். சாரல் படத்­தின் இசை வெளி­யீட்டு விழா­வில் பி­ரி­யங்கா தனது ஆதங்கத்தை வெளிப்­படுத்­தினார். "நான் நடித்த மூன்று படங்களி­லுமே எனக்கு நல்ல பெயர் கிடைத்­தது. எந்தக் காட்­சி­யி­லும் சொதப்­பி­ய­தில்லை. எல்லா இயக்­கு­நர்­களி­ட­மும் நல்ல பெயர் பெற்­றி­ருக்­கி­றேன். இருந்தா­லும் எனக்கு ஏன் இன்­னும் தமிழ்த் திரை யுலகில் முன் னணி இடம் கிடைக்­க­வில்லை? தமிழ்ப் பொண்ணு என்­ப­தாலா? என்ற கேள்வி எனக்­குள் இருந்துகொண்டே இருக்­கிறது.

இந்தக் கேள்­வியை எனக்­குள்ளே வைத்­துக்கொண்­டி­ருப்­பதை­விட, ஊடகங்கள், திரை­யு­ல­கப் பிர­மு­கர்­கள் இருக்­கும் இந்த மேடை­யில் வெளிப்­படுத்­தினால் விடை கிடைக்­குமோ என்­று­தான் இங்கே சொல்­கி­றேன். "இந்தப் படத்­தின் இயக்­கு­நர் பேசு­வதுகூட அடுத்­த­வ­ருக்­குக் கேட்­காது. அத்தனை சாது­வா­ன­வர். எனக்கு இந்தப் படத்­தி­லும் நல்ல வேடம். சாரல் உங்களுக்­குப் பிடித்த பட­மாக இருக்­கும் என நம்­பு­கி­றேன்," என்றார். ஸ்ரீபிரி­யங்கா பேசி முடித்­த­தும் மைக் பிடித்த விஜய் சேது­பதி, "இப்­போது பேசிய ஸ்ரீபிரி­யங்கா தனது ஆதங்கத்தை வெளிப்­படுத்­தினார். "பார்க்க லட்­ச­ண­மாக அழ­காக இருக்­கிறார். பெரிய வாய்ப்­பு­கள் வர­வில்லையே என்று புலம்ப வேண்டாம். "நிச்­ச­யம் அடுத்­த­டுத்­துப் பெரிய வாய்ப்­பு­கள் அவ­ருக்கு வரும்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!