வெயில் பாதிப்பால் ‘பாகுபலி 2’ படப்பிடிப்பு நிறுத்தம்

ஹைதராபாத்தில் 45 செல்சியஸ் வெயில் கொளுத்துகிறதாம். பல மாவட்டங்களில் 110 செல்சியஸ்ஸைத் தாண்டியதுடன் அனல் காற்றும் வீசுகிறது. இன்னும் 4 நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்று வானிலைத் தகவல் மையம் எச்சரித்து இருக்கிறது. வெயில் காரணமாக ராஜமௌலி இயக்கிவரும் 'பாகுபலி-2' படத்தின் படப்பிடிப்பு 2 வாரத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா ஆகியோர் நடிக்கிறார்கள். வெயிலில் படப்பிடிப்பு நடப்பதால் நடிகர், நடிகைகள் ஒப்பனை செய்துகொண்டு நடிக்க முடியவில்லையாம்.

அதன் காரணமாக நடிகைகள் பங்கேற்கும் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் படத்தின் மற்ற பணிகள் வழக்கம்போல் நடக்கும் என்றும் பிரபாஸ், ராணா ஆகியோரின் உடற்பயிற்சி தினமும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 'பாகுபலி-2' படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி சித்திரைப் புத்தாண்டு தினத்தில் வெளியிட இயக்குநர் ராஜமௌலி திட்டமிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!