தகிக்கும் வெயிலால் படப்பிடிப்புகள் பாதிப்பு

'பாகுபலி' இரண்டாம் பாகம் படத்தின் படப்பிடிப்பை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைப்பதாக படத்தின் இயக்குநர் ராஜமவுலி அறிவித்த நேரமோ என்னவோ, இதேபோல் மேலும் பல படப்பிடிப்பு கள் வெயிலால் பாதிக்கப் பட்டுள்ளன. விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிக்கும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பூந்தமல்லி அருகே கொளுத்தும் வெயிலில் நடந்து வந்தது. தற்போது இதன் படப் பிடிப்பு குளுகுளு பகுதியான காஷ் மீருக்கு மாற்றப்பட்டு உள்ளது. கார்த்தி நடிக்கும் 'காஸ்மோரா', சுந்தர்.சி. இயக்கும் 'முத்தின கத்திரிக்கா' உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்புகள் சென்னையில் கொளுத்தும் வெயிலில் நடக்கின்றன.

இதுபோல் சிம்பு-மஞ்சிமா நடிக்கும் 'அச்சம் என்பது மடமையடா', வெங்கட் பிரபுவின் 'சென்னை 28' இரண்டாம் பாகம், விஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடிக்கும் படம். அருண்விஜய் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புக ளும் சென்னையில் கொளுத்தும் வெயிலில் நடந்துவருகின்றன. வெயிலைத் தாங்க முடியாத நடிகர், நடிகைகள் தங்கள் காட்சிகளில் நடித்து முடித்ததும் கேரவனுக்குள் சென்று முடங்கி விடுகின்றனர். வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பெரும்பாலும் இரவிலும் காலை மற்றும் மாலையிலும் படப் பிடிப்புகளை நடத்துகிறார்கள். பகல் வேளையில் படப்பிடிப்புகள் நடத்துவதைத் தவிர்க்கின்றனர். மே மாதம் வரை இது தொடருமாம்.

'இருமுகன்' படத்தின் ஒரு காட்சியில் விக்ரம், நித்யா மேனன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!