கண் கலங்கிய சின்னத்திரை ‘மைனா’

மைனா என்ற பெயரைக் கேட்டதும் நம் நினைவுக்கு வருபவர் நடிகை அமலாபால். ஆனால் சின்னத்திரை ரசிகர்களுக்கு மைனா என்றால் அது நந்தினிதான். 'வம்சம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், சின்னத்திரை மூலம்தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 'சரவணன் மீனாட்சி' தொடரில் மைனா என்ற சுட்டிப் பெண் வேடத்தில் இவர் செய்யும் நகைச்சுவை கலாட்டாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு ரசிகை மைனாவைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினாராம். உடனே நேரில் சென்று அவரைச் சந்தித்த நந்தினி, அந்த ரசிகையுடன் தம்படம் (செஃல்பி) எடுத்து அவரது ஆசையை நிறைவேற்றினாராம். ஆனால் ஒப்பனையின்றி, நகரத்துப் பெண்ணைப் போல உடையணிந்து சென்றதால், அந்த ரசிகைக்கு மைனாவை முதலில் அடையாளம் தெரியவில்லையாம். அண்மைய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இச்சம்பவத்தை கண்கள் கலங்க விவரித்தார் நந்தினி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!