மாயா: வெற்றிப்பட நாயகி ஆவேன்

'டார்லிங் 2' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மாயா. இப்போது 'உன்னோடு கா' படத்தில் ஆரியுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். "இந்தப் படத்தில் நடிக்கும் எல்லோரும் படப்பிடிப்பின்போது கலகலப்பாக பழகினோம். ஜாலியாக பேசிக் கொண்டிருந்தாலும் கேமரா முன்பு நின்றால் ஒரே டேக்கில் நடித்து விடுவார்கள். எனக்கு ஏதாவது தெரியவில்லை என்றால் சொல்லித் தருவார்கள்.

"என்னுடன் நடித்தவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. அது நான் நன்றாக நடிப்பதற்கு உதவியாக இருந்தது. 'டார்லிங் 2' படத்தில் கலையரசன், காளி வெங்கட் இருவரும் எனக்கு நடிப்பு தொடர்பில் நிறைய உதவிகளைச் செய்தார்கள். அது போல, படக்குழுவினர் அனைவரும் என்னிடம் ஒரு சகோதரியைப் போல் பாசம் காட்டினர். "இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் திரையில் என்னை மிகவும் அழகாக காண்பித்துள்ளார். 'டார்லிங் 2' படத்தைவிட இதில் மிகவும் அழகாக இருக்கிறேன். இது நகைச்சுவை கலந்த குடும்பப் படம். நிச்சயம் ரசிகர்கள் இதை வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு. நான் வெற்றிப்பட நாயகி ஆவேன்," என்கிறார் மாயா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!