‘கடுகு’ படத்தில் புலி வேடம் போட்ட ராஜகுமாரன்

'கோலி சோடா', '10 என்றதுக்குள்ள' ஆகிய படங்களை இயக்கிய விஜய் மில்டன் தற்போது குறைந்த செலவில் ஒரு படத்தை எடுத்து வருகிறார். தேவயானியின் கணவர் ராஜகுமாரன், பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இப்படத்திற்கு 'கடுகு' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் புலி வேடம் போடும் தெருக்கூத்துக் கலைஞராக ராஜகுமாரன் நடித்திருக்கும் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ராஜகுமாரனுக்கு வில்லனாக பரத் நடித்திருக்கிறார். இதற்காக திருநெல்வேலி, சிவகிரி, கள்ளக்குறிச்சி பகுதிகளில் இருந்து உண்மையான புலிக் கலைஞர்களை வரவழைத்து, ராஜகுமாரனுக்குப் பயிற்சி கொடுத்துள்ளனர். சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் பயிற்சி எடுத்துக்கொண்ட பின்னரே இப்படத்தில் ராஜகுமாரன் ஒரு தெருக்கூத்துக் கலைஞராக நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. மே 9 ஆம் தேதி முதல் இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளைப் படமாக்க இயக்குநர் விஜய் மில்டன் திட்டமிட்டிருக்கிறாராம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!