3 கோடி செலவு; 3 லட்சம் வரவு: புலம்பும் தயாரிப்பாளர்

"டெல்லி கணேஷ் தயாரிப்பில் அவருடைய மகன் மகா, வின்சென்ட் அசோகன், அண்ணாமலை உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியான படம் 'என்னுள் ஆயிரம்'. இப்படத்திற்குப் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் டெல்லி கணேஷ் தனது படத்திற்கு நிலவிய பிரச்சினை கள் என்னென்ன என்று விவரித் துள்ளார். மிகுந்த வருத்தத்துடனும் ஆதங்கத்துடனும் சில விவரங்களை அவர் தெரிவித்துள்ளார். "3 கோடி ரூபாய் போட்டு நல்ல தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்துப் படமெடுத்தால், ஒன்றரை மணிக்கு வெளியானால், உப்புமா கம்பெனி என்று சொல்வார்களாம்.

அதுவும் இதைச் சொல்வது யார், கள்ளத்தனமாக டிக்கெட் விற்கும் சிறுவன். ஆக... எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்கிறது. நமக்குத் தான் ஒன்றுமே தெரியவில்லை. யாரும் எதுவும் சொல்லமாட்டேன் என்கிறார் கள். என்ன செய்வது, யாரிடம் போய்க் கேட்பது? "ஒரு தயாரிப்பாளர் சம்பாத்தியமே இல்லாமல் 3 கோடி போட்டுவிட்டு 3 லட்சம் மட்டுமே வசூலாகக் கிடைத்தால் என்ன முடிவெடுப்பார்? பார்ப்போம். ஆவன செய்வோம்," என்று கூறியுள்ளார் டெல்லி கணேஷ்.

'என்னுள் ஆயிரம்' படத்தில் இடம்பெறும் காட்சியில் மகா, மரீனா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!