உண்மைச் சம்பவத்தை படமாக்கும் இயக்குநர்

சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக ரித்தீஷ்குமார் தயாரிக்கும் படத்திற்கு 'நான் அவளை சந்தித்த போது' என்று பெயரிட்டுள்ளனர். இதில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மலையாள முன்னணி நடிகர் இன்னசன்ட் முக்கிய வேடமேற் றுள்ள நிலையில், இமான் அண் ணாச்சி, ஜி.எம்.குமார், ராதா, பருத்திவீரன் சுஜாதா, ஸ்ரீரஞ்சனி, கோவிந்த மூர்த்தி, சாம்ஸ், டி.பி.கஜேந்திரன், சிங்கமுத்து என பெரிய நட்சத்திரப் பட்டாளமே களமிறக்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவை ஆர்.எஸ்.செல்வா கவனிக்க ஹித்தேஷ் முருகவேல் இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களை கவிஞர்கள் அறிவுமதியும் நா.முத்துக்குமாரும் இயற்றியுள்ள னர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எல்.ஜி.ரவி சந்தர். இவர் 'மாசாணி', பரத் நடித்த 'ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி' போன்ற படங்களை இயக்கியவர். கடந்த 1996ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி கதையை உரு வாக்கி இருக்கிறாராம் ரவிசந்தர். "சினிமா பின்னணியை கொண்ட இந்த திரைக்கதையில், அம்மா பாசம், காதல், நகைச்சுவை, திடீர் திருப்பங்கள் என எல்லாம் உண்டு. அதனால் சுவாரசியமாக இருக்கும்," என்கிறார் இயக்குநர்.

'அவளை நான் சந்தித்தபோது' படத்தில் சந்தோஷ் பிரதாப், சாந்தினி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!