சூர்யா: மக்கள் வாக்களித்தால் ஒருநாள் வசூலை விட்டுத்தர தயார்

சூர்யா, சமந்தா ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் '24'. ரசிகர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இப்படம். தேர்தல் நேரத்தில் படத்தை வெளியிடுகிறீர்களே, வசூல் பாதிக்கப்படாதா என்று கேட்டால், அர்த்தத்துடன் சிரிக்கிறார் சூர்யா. "நூறு விழுக்காடு வாக்குப் பதிவுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதற்கு நானும் பங்களிப்பு செய்துள்ளேன்.

தேர்தலில் வாக்களிக்கவேண்டும் எனப் பொதுமக்கள் முடிவுசெய்துவிட்டால் அதைவிட நல்ல விஷயம் கிடையாது. அதற்காக என் படத்தின் ஒரு நாள் வசூலை விட்டுக்கொடுக்கவும் நான் தயார். இப்படத்தின் தயாரிப்பாளரும் நான்தான் என்பதால் ஒரு நாள் வசூலை இழப்பதற்கு நான் தயங்கப் போவதில்லை. பல கோடி செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளேன். '24' என்ற தலைப்புக்கான காரணத்தை திரையரங்கு சென்று படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்," என்கிறார் சூர்யா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!