அனுஷ்காவை கவர்ந்த ஆண்கள்

கண்களை மறைக்க கண்ணாடி அணியும் ஆண்களை அனுஷ்காவுக்கு அறவே பிடிக்காதாம். ஏன்? என்று கேட்டால் அலுத்துக் கொள்ளாமல் விரிவாக விளக்கமளிக்கிறார். ஒருவர் கண்ணை பார்த்து அவர் எந்த மாதிரி ஆண் என்று கணிக்க முடியும் என்பது அனுஷ்காவின் நம்பிக்கை. கண்களுக்கு பெரிய சக்தி இருப்பதாகவும் சொல்கிறார். "அதேபோல் முகபாவம், பேச்சு, உடல் மொழி களை வைத்தும் ஒருவரை எடை போடலாம். சிரிப் பும் ஒருவரின் தரத்தை வெளிப்படுத்தும். நான் ஆண்களின் கண்களைத்தான் முதலில் பார்ப்பேன். நல்ல மனிதர் என்றால் பார்வையில் நேர்மை தெரியும். நேர்மையான ஆண்களை எனக்குப் பிடிக்கும். அவர்களிடம் நன்கு பேசிப் பழகுவேன்.

"சில ஆண்கள் கண்ணாடி அணிந்து கண் களை மறைத்து விடுகின்றனர். அவர்கள் தங்கள் குணாதிசயம் வெளியே தெரியக்கூடாது என்று மறைக்கிறார்கள். எனக்குக் கண்ணாடி அணியும் ஆண்களை அறவே பிடிக்காது. அவர்களை விட்டு விலகிச் சென்று விடுவேன். "சிரிப்பும் ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிய வைக்கும். ஒளிவு மறைவு இல்லாமல் சிரிக்கும் ஆண்களை எனக்குப் பிடிக்கும். அவர்களிடம் கள்ளம் கபடம் இருக்காது. அத்துடன் எளிமையாக இருக்கும் ஆண்களையும் விரும்புவேன். "என்னைச் சுற்றிலும் நேர்மையானவர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகி றேன். அதிர்ஷ்டவசமாக இதுவரை அப்படிப்பட்டவர்கள் தான் என் னோடு இருக்கிறார்கள். சிறந்த முழுமையான மனிதருக்கு அடை யாளம் எனது தந்தை. அவ ருக்கு இணையாக எந்த ஆணும் இல்லை என்பேன்.

"சினிமாவில் அறிமுக மான புதிதில் கவர்ச்சி, காதல் கதையம்சமுள்ள படங்களில் மட்டுமே நடித் தேன். அந்த படங்கள், வெளி நாடுகளில் சுற்றும் மகிழ்ச்சியை எனக்கு அளித்தது. அதையும் மீறி ஏதேனும் சாதிக்க வேண் டும் என்ற உந்துதலில் கதா நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். "இது போன்ற படங்களில் நடிப் பது சிரமமாகத்தான் இருக்கிறது. ஆனால் படத்துக்காக கிடைக்கும் பாராட்டு களை நினைக்கும்போது சிரமங்கள் மொத்தமாக மறைந்து விடுகிறது," என்கிறார் அனுஷ்கா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!