திரை விருது விழா

தமிழவேல்

தென்னிந்தியத் திரைப்பட உலகம் இரு நாட்களுக்கு சிங்கப்பூருக்குப் படையெடுக்க இருக்கிறது. 'சைமா' எனும் ஐந்தாவது தென்னிந்திய அனைத்துலகத் திரைப்பட விருது விழா இவ்வாண்டு சிங்கப்பூரில் வரும் ஜூன் 30ஆம் தேதியும் ஜூலை ஒன்றாம் தேதியும் சன்டெக் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களுக்கான இந்த அனைத்துலக விருது வழங்கும் விழாவை தமிழ் முரசு நாளிதழ், தப்லா வார இதழ், டி ஐடியாஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்கின்றன.

இச்செய்தியை சிங்கப்பூர் ரசிகர்களிடம் தெரிவிக்க பாகுபலி திரைப்படப் புகழ் ராணா டக்குபதி, சுருதிஹாசன், அனிருத் ஆகியோர் நேற்று சிங்கப்பூரின் சுவிஸே„ட்ட லில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்திற்கு வந்திருந்தனர். அம்மூவரும் நேற்று 'சைமா'வின் டுவிட்டர் இணையத்தளத்தில் நேரடியாக தங்கள் ரசிகர்களுடன் இணைந்து அவர்களது கேள்வி களுக்குப் பதிலளித்தனர். ஜூன் 30ஆம் தேதி தெலுங்கு, கன்னடத் திரைப்பட விருது விழா வும் அடுத்த நாள் ஜூலை ஒன்றாம் தேதி தமிழ், மலையாளத் திரைப்பட விருது விழாவும் நடைபெறும். தென்னிந்தியத் திரைப்பட உலகிலிருந்து 100க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்துகொள்வர். ரசிகர்கள் இந்த விழாவிற்கான நுழைவுச்சீட்டுகளை இன்று முதல் 'சிஸ்டிக்'கில் பெற்றுக்கொள்ளலாம். இதற்குமுன் துபாய், ஷார்ஜா, கோலாலம்பூர் ஆகிய நகரங்களில் தென்னிந்திய அனைத்துலகத் திரைப்பட விருது விழா நடந்திருக் கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!