விஜய்யிடம் நல்ல பெயர் வாங்க கடுமையாக உழைக்கும் நாயகி

பரதன் இயக்கும் விஜய்யின் 60வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், படத்திற்காக இயக்கு நரைவிட நாயகி கடுமையாக உழைப்பதாகக் கூறப்படுகிறது. விஜய்யிடம் நல்ல பெயர் வாங்கு வதற்காகத்தான் அம்மணி இவ்வாறு செய்வதாக படக்குழுவினர் கூறுகின்றனர். யாரும் எதிர்பார்க்காத விதத் தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரே‌ஷிற்கு வாய்ப்பளித்து அனை வரையும் வியப்பில் ஆழ்த்தினார் விஜய்.

இதனால், இதுவரை நடித்த படங்களைவிட இப்படத்தில் சிறப்பாக நடித்து விஜய்யிடம் நல்ல நடிகை என்கிற பெயரை எடுத்துவிட வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறார். இதற்காக, தனது அம்மா மேனகாவுடன் அண்மையில் இயக்குநர் பரதனைச் சந்தித்த கீர்த்தி சுரேஷ் தனக்கு முக்கியத் துவம் வாய்ந்த காட்சிகளைப் பற்றி கேட்டறிந்ததோடு, அக்காட்சி களுக்கான வசனங்களையும் வாங்கிக்கொண்டுள்ளார். தற்போது அந்த வசனங்களை மனப்பாடம் செய்து தன் அம்மா வின் அறிவுரைப்படி அவற்றை ஒத்திகை பார்க்கும் நடவடிக்கை யிலும் ஈடுபட்டு வருகிறார். விஜய்யுடன் நடிக்கும் அனைத்துக் காட்சிகளையும் ஒரே டேக்கில் முடிக்க வேண்டும் என்பதற்காக தீயாக வேலை செய்து வருகிறார் கீர்த்தி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!