லட்சுமி: பட்டங்கள் வேண்டாம், நல்ல நடிகையானாலே போதும்

தமிழ்த் திரையுலகில் எதையும் சாதிக்கவேண்டும் என்ற ஆசையில் காலடி எடுத்து வைக்கவில்லை. முடிந்தவரை நல்ல படங்களில் நடித்து, நல்ல நடிகை என்று பெயர் வாங்கினாலே போதும் என்று நினைக்கிறேன். மற்றபடி கனவுக்கன்னி, கவர்ச்சி ராணி, 'நம்பர் ஒன்' நடிகை என்ற பட்டத்திற்கு எல்லாம் ஏங்குபவள் நானல்ல; அதெல்லாம் எனக்கு வேண்டாம் என்று உறுதியாகக் கூறுகிறார் லட்சுமி பிரியா. சென்னையிலேயே பிறந்து, வளர்ந்து நாடகத்தின் வழியாக சினிமாவுக்கு வந்திருப்பவர் தமிழ் நடிகை லட்சுமி பிரியா. "ஒரு படத்திலாவது விளையாட்டு வீராங்கனையாக, அதுவும் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து பின்னி எடுக்க முடிவு செய் துள்ளேன்," என்று முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையான லட்சுமி கூறுகிறார்.

"எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பேராசை உள்ளவள் நான். நடிப்பு மீது தீராத ஆசை இருந்தது. "எங்கள் குடும்பத்தில் சினிமா பார்ப்பவர்களே குறைவு. சினிமாவில் நடிப்பதை ஏற்றுக்கொள்வார்களா என்ற பயம் இருந்தது. அதனால்தான் ஹியூமன் ரிசர்ச் மானேஜ்மென்ட் குறித்து படித்து முதுநிலை பட்டப்படிப்பை முடித்தேன். பிறகு நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக மாறினேன். நிறைய நாடகங்களில் நடித்தேன். அதன்பிறகு நடிப்பதை குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர்.

"என்னுடைய நாடகத்தைப் பார்த்து விட்டு மகிழ்திருமேனி அவருடைய 'முன்தினம் பார்த்தேனே' படத்தில் சின்ன பாத்திரம் கொடுத்தார். பிறகு சினிமா மீது ஆர்வம் அதிகமாகிவிட்டது. வீட்டில் உள்ளவர்களும் பச்சைக்கொடி காட்டினார்கள். 'சுட்ட கதை' படத்தில் நாயகியாக நடித்தேன். 'கள்ளப்படம்' நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. "நான் நடித்த 'சால்ட் மேங்கோ ட்ரீ' மலையாளப்படம் அண்மையில் வெளி யாகி வெற்றி பெற்றுள்ளது. இப்போது 'டிக்கெட்' படத்தில் நடித்து முடித்துள் ளேன். இன்னும் தலைப்பு வைக்காத இரு படங்களில் நடித்து வருகிறேன்."

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!