குத்துச்சண்டை வீரராக நடிக்கும் பரத்

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கிவரும் ‘கடுகு’ படத்தில் இப்போது நடித்து வருகிறார் பரத். இப்படத்தில் தேவயானியின் கணவர் இராஜகுமாரன் தான் நாயகன் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் கதைப்படி பரத், இராஜகுமாரன், விஜய் மில்டனின் தம்பி என மூவருக்குமே நாயகன் வேடம்தானாம். இதில் இராஜகுமாரன் கிராமங்களில் புலி வேடம் போட்டு வீதிகளில் ஆடும் வேடத்தில் நடிக்க, பரத் கிராமத்து குத்துச்சண்டை வீரராக நடித்துள் ளார். இவர் வில்லனாக நடிப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் பரத் நடிப்பதும் நேர்மறையான வேடம்தான் என்கிறார்கள். அதோடு, இந்த வேடத்துக்காக தனது உடம்பை கட்டுமஸ்தாக வைத்திருக்கவேண்டும் என்பதால், உடற்பயிற்சிக் கருவிகளை படப்பிடிப்புத் தளத்திற்கே கொண்டுசென்று தினமும் காலை,- மாலை வேலைகளில் உடற் பயிற்சி செய்தபடி நடித்து வரு கிறாராம் பரத்.