பெயரை மாற்றிக்கொண்ட பிரியங்கா

'கங்காரு', 'வந்தா மல', 'கோடை மழை' படங்களில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீபிரியங்கா. இவர் தற்போது தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். புதுவையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான ஸ்ரீபிரியங்கா, மிகவும் இயல்பாக நடிப்பவர். தமிழ்ப் பெண்ணான தனக்கு தமிழ்ச் சினிமாவில் உரிய இடம் வேண்டும் என உரிமையாகக் கேட்டு வருபவர். இப்போது 'சாரல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது பெயரை ஸ்ரீஜா என மாற்றிக் கொண்டுள்ளாராம்.

"பிரியங்கா என்ற பெயரில் ஏற்கெனவே சில நடிகைகள் இருந்ததும் இருப்பதும் இப்போதுதான் எனக்கே தெரிந்தது. பெயர்க் குழப்பம் வேண்டாமே என்பதற்காகத்தான் ஸ்ரீஜா என மாற்றிக் கொண்டேன். மேலும் நியூமராலஜிபடியும் எனக்கு இந்தப் பெயர் சரியாக இருக்கும் என்றார்கள். "என்னுடைய நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் 'சாரல்' படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறேன். மேலும் நான் நடித்துள்ள 'ரீங்காரம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இவை தவிர இன்னும் சில படங்களுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். கதையைப் பொறுத்து முடிவு செய்யலாம் என காத்திருக்கிறேன்," என்கிறார் ஸ்ரீஜா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!