புதுப்படத்தில் குழந்தைகளுக்காக உருவான அழகிய பாடல்

ஆரி, மாயா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'உன்னோடு கா'. இந்தப் படத்துக்காக குழந்தைகள் பாடல் ஒன்றை உருவாக்கி இருக்கி றார்கள். இப்பாடலுக்கு சத்யா இசை அமைத்துள்ளார். "இந்தப் படத்தில் 'ஓடிட்டாங்க' என்னும் பாடல் இடம் பெற்றுள்ளது. மனோ, கிருஷ்ணராஜ் இருவரும் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் பாடலில் இணைந்துள்ளனர். "இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது என் மகள் வைமித்ரா பாடி யுள்ள 'ஊதே ஊதே' பாடல். தயாரிப் பாளர் அபிராமி ராமநாதனின் பேத்தி மீனாட்சி இந்தப் பாடலில் நடித்திருக் கிறாள். இப்பாடல்தான் படத்தின் சிறப் பம்சம். முழுக்க முழுக்க குழந்தைகளை வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் பாட லுக்கு மதன் கார்கியின் தனித்துவமான வரிகள் மேலும் அழகு சேர்த்துள்ளது.

"'ரா' என்னும் தமிழ் வார்த்தையை 'தா' போல் உச்சரிக்க செய்திருக்கிறார் மதன். இந்தப் பாடலுக்கு வாத்தியங்கள் வாசிப்பதில் இருந்து குழுவாக பாடுவது வரை அனைத்திலுமே குழந்தைகளின் பங்களிப்பு மட்டுமே உள்ளது. "உலகளவில் பியானோ இசை வாத்தியத்தில் திறன் பெற்ற லிடியன், இந்திய அளவில் புல்லாங்குழலில் புகழ் பெற்ற வர்‌ஷினி, சிம்பனி இசையில் வயலின் வாசிக்கும் அன்பு ஆகிய குழந்தைகள் இந்தப் பாடலுக்கு அஸ்திவாரமாக அமைந்துள்ளனர். பாடலில் ஒலிக்கும் குரல்களுக்குச் சொந்தக்காரர்களான சிந்தியா, சஜினி, சாஷ் வின், சினேகா மற்றும் உசீஜா ஆகியோர் நிச்சயம் பெரியளவில் பேசப் படுவர். இப்பாடலின் மெல்லிசைக்கு இவர்கள் தூணாக அமைந்து இருக் கின்றனர்.

'உன்னோடு கா' படத்தின் ஒரு காட்சியில் ஆரி, மாயா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!