முதல் காட்சியைப் பார்க்க விரும்பும் விஜய் சேதுபதி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இறைவி’. இப்படத்துக்கு தணிக்கைத்துறை ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதையடுத்து படத்தை ஜூன் 3ஆம் தேதி வெளியிட இருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருக்கிறார். இப்படத்தை அடுத்து தனுஷ் படத்தை இயக்கப் போகிறாராம்.
‘இறைவி’யில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி உள் ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார்.
“படத்தில் ஒரு காட்சி கூட ரசிகர்களை ஏமாற்றாது என்பதை உறுதியாகச் சொல்லமுடியும். இந்தப் படத்தில் நடித்த எல்லாருமே முழுமையான பங்க ளிப்பைக் கொடுத்துள்ளோம். படத்தின் முதல் நாள், முதல் காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். அன்றைய தினம் சென்னையிலுள்ள ஏதேனும் ஒரு திரையரங்கில் என்னைப் பார்க்கலாம்,” என்கிறார் விஜய் சேதுபதி.