கொள்ளிடம்

அழகு குறைவு, ஆற்றல் குறைவு எனும் தாழ்வு மனப்பான்மையே சிலரை அழித்துவிடும். தான் ஆசைப்பட்ட ஒருவரிடம் காதலைச் சொல்ல நினைக்கும்போது, தாழ்வு மனப்பான்மையே மனதுள் “உனக்கு இது தேவையா?” எனும் கேள்வியை எழுப்பி, மனதளவில் சாகடித்துவிடும். “இதுவும் ஒருவகையில் கொலைதான். இந்தக் கொலைக்குத்தான் கொள்ளிடம் என்று பெயர். இதுவே என் படத்தின் கதைக்கரு,” என்கிறார் ‘கொள்ளிடம்’ பட இயக்குநர் நேசம் முரளி. இப்படத்தின் நாயகனும் இவரே. புதுமுகம் லூதியா நாயகியாக அறிமுகமாகிறார். வடிவுக்கரசி உள்பட பலர் நடிக்கிறார்கள்.