‘மருது’

தன்னுடைய பெரியப்பாவை எடுத்துக்காட்டாக வைத்து தான் தன்னுடைய படத்தின் நாயகன் 'மருது'வை உருவாக்கியதாக இயக்குநர் முத்தையா கூறியுள்ளார். 'குட்டிப்புலி', 'கொம்பன்' ஆகிய படங்களை இயக்கிய முத்தையா தற்போது விஷாலை வைத்து 'மருது' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீடு காணத் தயாராக இருக்கிறது. இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குநர் முத்தையாவும் விஷாலும் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். 'மருது' தமது இயக்கத்தில் வெளிவரவிருக்கும் மண்மனம் மாறாத, மீண்டும் கிராமிய திரைப்படமாக இருக்கும் என்கிறார் முத்தையா.

ஒரு பாட்டிக்கும் பேரனுக்குமான கதைதான் இப்படமாம். தாய் தகப்பனை இழந்தவர்களுக்கு முதலில் கைகொடுப்பது பாட்டியாகத்தான் இருக்கும் என்பதால், அந்த உறவுடன் சம்பந்தப்பட்ட உணர்வுகளை அழகாக காட்சிப்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார் நாயகன் விஷால். "மகன் வழி வந்த பேரன் பேத்தியாக இருந்தாலும் சரி, மகள் வழி வந்த பேரன் பேத்தியாக இருந்தாலும் சரி, நம்முடைய பெற்றோர்களைக் கடந்து பாட்டி என்பவள் நமக்கு வாங்கிக் கொடுக்கும் பொருட்கள் நிச்சயம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். பாட்டி, பேரன் என்ற தவிர்க்க முடியாத உறவை பற்றிப் பேசும் படம்தான் இந்த 'மருது'.

"உலகத்தில் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த அனைவருக்கும் உடல்வாகு தெறிப்பாகத்தான் இருக்கும். எல்லா ஊரிலும் மூட்டைகளைச் சுமக்கும் கூலிகள் இருப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கைக்காக மிகவும் கடினமாக உழைப்பார்கள். அவர்களைப் பார்க்க நல்ல வளத்தியாக, வயிறு என்ற ஒரு பாகம் அறவே வெளியே தெரியாத அளவிற்கு இருப்பார்கள். "அவர்களுடைய வேலை காலை 10 மணிக்குத் தொடங்கும் என்றால் இரவு 10 மணி வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இப்படி இருக்கும் மனிதர்களைப் பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்துக்கு நான் மிகச்சரியாகப் பொருந்தி இருப்பதாக இயக்குநர் சொன்னார். உண்மைதான், எனது உடல் அமைப்பும் நிறமும் இந்தக் கதாபாத்திரத்துக்கு நன்றாகப் பொருந்தியது," என்கிறார் விஷால்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!