ரசிகர்களை நம்பும் பாபி சிம்கா

“நான் எந்தக் கட்சியையும், எந்தத் தனிப்பட்ட நபர் சார்பாகவும் இந்தப் படத்தை எடுக்கவில்லை,” என்று இயக்குநர் சரத் தெரிவித்துள்ளார். இவரது இயக்கத்தில் பாபி சிம்கா, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் புதுப் படம் ‘கோ 2’. எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் இப்படம் இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நேரம் என்பதால், அரசியலைக் கதைக்கள மாகக் கொண்ட இப்படம் இப்போது வெளியாவதாகக் கூறப்படுகிறது.

இப்படம் தமிழக அரசியலில் சில சலசலப்புகளை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சில விளக்கங்களை அளித்துள்ளார் இயக்குநர் சரத். “நான் எந்தக் கட்சியையும் எந்தத் தனிப்பட்ட நபர் சார்பாகவும் இந்தப் படத்தை எடுக்கவில்லை. அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை ஒரு சாதாரண மனிதன் எப்படி எதிர் கொள்கிறான் என்பதுதான் இந்தப் படம்.

‘கோ 2’ படத்தில் பாபி சிம்கா, நிக்கி கல்ராணி, பால சரவணன்.

Loading...
Load next