‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ பாடல்கள் வெளியீடு

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரபல நடிகர் அக்ஷய் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இப்படத்தில் ஜி.வி.பிரகா‌ஷுக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். மேலும் நிரோஷா, கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘டார்லிங்’ இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார்.