சமந்தாவுக்கு சிங்கப்பூரில் சிகிச்சை

ஏற்கெனவே சரும ஒவ்வாமை பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த சமந்தாவுக்கு மீண்டும் அதே பிரச்சினையாம். இதையடுத்தே அடுத்த ஆறு மாதங்களுக்கு புதுப்படங்களை ஒப்புக்கொள்ளப் போவதில்லை என அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் மிக விரைவில் சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சரும பிரச்சினைக்காக சிறப்பு சிகிச்சை பெற உள்ளதாகக் கேள்வி. இம்மாத இறுதியில் சிகிச்சைக்காக சிங்கப்பூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்.

அண்மையில் படப்பிடிப்பில் இருந்து சில நாட்கள் ஓய்வு எடுக்கப்போகிறேன் என்று சமூக வலைத்தளத்தில் சமந்தா கூறி இருந்தார். சரும ஒவ்வாமைக்கான சிகிச்சை முடிந்தபிறகு மீண்டும் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “சிங்கப்பூரில் சிகிச்சை என்றதும் ஊடகங்கள் பல்வேறு விதமாக வதந்திகளைப் பரப்பிவிடும். எனவே பயணம் மேற்கொள்ளும் முன்னர், நானே வெளிப்படையாக அறிக்கை ஒன்றை வெளியிடப்போகிறேன்,” என்று நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம் சமந்தா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்