‘கோ 2’ படத்தினால் ஓ.பி.எஸ்.ஸுக்குத் தலைவலி

அண்மையில் வெளியாகி திரையில் ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘கோ 2’. தமிழக முதல்வராக பிரகாஷ் ராஜும் உள்துறை அமைச்சராக இளவரசும் நடித்துள்ளனர். இளவரசின் தோற்றம், அதிமுகவின் ஓ.பி.எஸ். தோற்றத்தைப் போலவே அமைக்கப்பட்டுள்ளதாம். காதோர நரை, நெற்றியில் திருநீறு, அதன் கீழேக் குங்குமக் கீற்று என்று அச்சு அசல் ஓ.பி.எஸ். போலவே இருக்கிறாராம் இளவரசு. சாதாரண மக்கள் பார்த்தால் கூட அது ஓ.பி.எஸ்தான் என்று சொல்லும்படி கனகச்சிதமாக ஒப்பனை செய்திருக்கிறார்கள்.

படத்தில் “இவருக்குப் பிறகு நான்தான் அடுத்த முதல்வர்”, “முதல்வர் இல்லையென்றால் அவருடைய நாற்காலியில் உட்கார்ந்துவிடுவியா?” போன்ற வசனங்களும் ஓ.பி.எஸ்ஸையே குறிப்பிடுவதாகச் சொல்கிறார்கள் படம் பார்த்தவர்கள். தேர்தல் நேரத்தில் இந்தப் படம் வெளியாகியிருப்பதால் ஓ.பி.எஸ்ஸின் வெற்றியை இது பாதிக்குமா என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளன சில செய்தித்தாட்கள். படத்துக்கு நல்ல விளம்பரம். ஆனால் ஓ.பி.எஸ்ஸுக்கு? தலைவலிதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் படம் சரியான நேரத்தில் வெளியாகி இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்