பேய் படத்தைப் பற்றி விளக்கும் திரிஷா

கோலிவுட்டில் அண்மைக்காலமாக பேய் படங்கள்தான் வசூலைக் குவித்து வருகின்றன. அது மட்டுமல்ல. அனைத்துப் படங்களிலும் பெண்களே பேயாக வருவதால் கதாநாயகிக்குதான் படத்திலும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதனால் பேயாக நடிக்க நாயகிகள் போட்டா போட்டிப் போடுகிறார்கள்.

நயன்தாரா, ஹன்சிகா பேய் படங்களில் நடித்து படங்களும் வெற்றி பெற்றதையடுத்து திரிஷாவும் ‘அரண்மனை 2’ ‘நாயகி’ படங்களைத் தொடர்ந்து மீண்டும் பேயாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். “பேய் படத்தில் நடித்தால் எனக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. மேலும் படமும் வெற்றி பெறுகிறது. எத்தனைப் பேய் படங்கள் வந்தாலும் திரையரங்கத்திற்குச் சென்று அந்தப் படத்தை வெற்றிப்படமாக்காமல் விடமாட்டார்கள் நம் தமிழ் ரசிகர்கள். அதனால்தான் பேயாக நடிக்க விருப்பம் தெரிவித்தேன்,” என்கிறார் திரிஷா.