விரைவில் வெளியாகிறது ‘முத்தின கத்திரிக்கா’

சுந்தர்.சி நடித்து தயாரித்துள்ள ‘முத்தின கத்திரிக்கா’ படம் இம் மாதம் வெளியாக இருப்பதாக அப்படக்குழுவினர் அறிவித்திருக் கின்றனர். சுந்தர்.சி இயக்கத்தில் வெளி யாகும் படங்கள் வசூல் ரீதியில் தொடர்ந்து வெற்றி பெறுகின்றன. கடைசியாக ‘அரண்மனை 2’ வெளியானது. பேய்ப் படம் என்ப தால் மட்டுமல்லாமல், சுந்தரின் அபாரமான திரைக்கதையாலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தை இயக் காமல், தன்னுடைய உதவியாளர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்தார் சுந்தர்.சி.

‘முத்தின கத்திரிக்கா’ என்ற பெயரிடப்பட்ட இப்படம் மலையா ளத்தில் வெற்றிபெற்ற ‘வெள்ளி மூங்கா’ படத்தின் தமிழ் மறு பதிப்பாகும். இதில் சுந்தர்.சிக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா நடித் துள்ளார். மேலும் இவர்களுடன் வைபவ், சதீஷ், வி.டி.வி.கணேஷ், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தின் முதல் சுவரொட்டி நேற்று முன் தினம் வெளியாகியுள்ளது.

‘அரண்மனை 2’ படத்தில் சுந்தர்,சி. பூனம் பாஜ்வா