மீண்டும் இணைந்த நாயகன், இயக்குநர்

‘என்னமோ நடக்குது’ படம் மூல மாக யார் இவர் என்று திரையுல கில் கவனித்துப் பேசப்பட்டவர் இயக்குநர் ராஜபாண்டி. நாயகன் விஜய் வசந்துக்கும், தயாரிப்பாளர் வினோத்குமாருக் கும் இவரை ரொம்பவும் பிடித்துப் போக, அப்படியே அடுத்த படத் துக்கும் வளைத்துப் போட்டுவிட் டார்கள். விரைவில் வெளியாக இருக்கும் ‘அச்சமின்றி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் பரபரப் பாக உள்ளார் ராஜபாண்டி. மறுபடியும் அதே குழுவா? “ஆமாம். ‘என்னமோ நடக் குது’ படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வணிக ரீதியாகவும் நல்ல பெயரெடுத்தது. திடீரென ஒருநாள் விஜய்வசந்த் அழைத்து, ‘என்ன சார் பண்றீங்க?’ எனக் கேட்டார். ‘அச்சமின்றி’ கதையைச் சொல்லி, வாய்ப்பு தேடிடுவதாகச் சொன்னேன். ‘நான் இருக்கும் போது எதுக்கு நீங்க வாய்ப்பு தேட வேண்டும்?’ என்று கேட்டு விட்டு, உடனே தயாரிப்பாளர் வினோத்குமாரிடம் அனுப்பினார்.

அவருக்கும் கதை பிடித்திருந்தது. பிறகென்ன... உடனே படப்பிடிப்புக்கு கிளம்பி விட்டோம். நாயகனுக்கு இணையான வேடத்தில் சமுத்திரக்கனி நடித் துள்ளாராமே? “ஆமாம். கதை எழுதும்போதே அந்தக் கதாபாத்திரத்தை சமுத் திரக்கனிக்குதான் என்று தீர்மா னித்து, அவர் பெயரைக் குறிப் பிட்டே காட்சிகளை எழுதினேன். அதன் பிறகு விஜய்வசந்தே சமுத்திரக்கனியிடம் பேசி இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்தார். அவர் பெரிய இயக்குநராக இருந் தும், என்னை மதித்து ஒத்துழைத்தார். சிருஷ்டி டாங்கே? “எம்பிஏ படித்த பெண் வேடம். ஒரு பிக்பாக்கெட் ஆசாமியின் வாழ்க்கையில் நுழைந்தால் என் னாகும் என்று போகும் கதை. சிருஷ்டி என்றாலே குடும்பப் பாங் காகவும் கவர்ச்சியாகவும் அசத்த கூடியவர் என்பது ரசிகர்களுக்குத் தெரிந்துள்ளது. ஆனால் இந்தப் படத்தில் அந்த எண்ணம் மாறும். “சண்டைக் காட்சிகளில் அசத்தி உள்ளார்,” என்கிறார் இயக்குநர் ராஜபாண்டி.

‘அச்சமின்றி’ படத்தில் விஜய்வசந்த், சிருஷ்டி டாங்கே

இப்பகுதியில் மேலும் செய்திகள்