மூன்றாவது முறையாக இணைந்த ஜோடி

‘திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜி.வி.பிரகா‌ஷுடன் இணைகிறார் ‘கயல்’ ஆனந்தி. இந்தப் படத்தில் இந்த ஜோடியின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. இதன் வெற்றியைத் தொடர்ந்து ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. இந்நிலையில், இதே ஜோடி மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறது. ராஜேஷ் இயக்கி வரும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

இதில் அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அவிகா கோர் என்னும் பாலிவுட் நடிகையும் நடித்து வந்தார். இந்நிலையில், அவிகா கோருக்குப் பதிலாக ‘கயல்’ ஆனந்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் உள்ளனர்.