அனுஷ்காவின் மனத்தூய்மை

ஒருவருக்கு மனத் தூய்மையே அழகைத் தரும் என்கிறார் நடிகை அனுஷ்கா. ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமாகத் தயாராகும் ‘எஸ் 3’ படத்தில் சூர்யா ஜோடி யாக நடித்துக் கொண் டிருக்கிறார் அனுஷ்கா. கூடவே, ‘பாகுபலி’ இரண்டாம் பாகத் திலும் நடிக்கிறார். அனுஷ்காவுக்கு முப்பத்து நான்கு வயதான நிலையிலும், கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து குவிகின்றன. இதற்கு அவருடைய குறையாத அழகும் தோற்றப் பொலிவுமே முக்கியக் காரணம் என்கின்றனர் திரையுலக விவரப் புள்ளிகள்.

தனது அழகை அவர் மிகக் கவனமாகப் பராமரித்து வருகிறார். அழகாக இருப்பது எப்படி? என்பது குறித்து அனுஷ்காவிடம் கேட்காத பெண்களே இல்லை. சரி, தன்னிடம் இதுகுறித்து விசாரிப்பவர்களிடம் அவர் சொல்லும் விளக்கம் என்ன? “நான் மிக அழகாக இருப்பதாக ரசிகர்கள், பட உலகினர் பாராட்டுகின்றனர். ஒரு படத்தில் உடல் பெருத்த பெண் வேடத்தில் நடித்தேன். அந்தப் பருமன் கூட அழகுதான் என்றும் கூறினர். நான் அழகாக இருப்பதற்கான ரகசியம் என்ன? என்று பலரும் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். “என்னைப் பொறுத்தவரையில் அழகு என்பது அவரவர் கையில் இருக்கிறது. சிலர் அந்த அழகை முறையாகப் பராமரித்து காப்பாற்றிக் கொள்கிறார்கள். வேறு சிலர், அதை தொலைத்து விடுகிறார்கள்.

“அழகு என்பது கடைகளில் கிடைக்கும் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதால் வருகிறது என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால் அது தவறு. அழகு சருமம் சம்பந்தப்பட்டது என்று நினைத்து சருமத்தை மட்டும் மெருகேற்றினால் அழகு வராது. அது மனம் சம்பந்தப்பட்டது. “இரவு தூங்காமல் இருப்பது, எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக் கொண்டு இருப்பது, சாதாரண பிரச்சினைக ளையும் கூட பெரிதாக எடுத்துக் கொண்டு அதிலேயே குழம்பிப்போய் இருப்பது போன்றவை அழகைக் கெடுத்து விடும்.