சூர்யா: வதந்திகளை நம்பாதீர்கள்

"அண்மையில் மலேசிய ஊடகம் ஒன்றில் எனக்கே தெரியாத, என்னைப் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மதம் சார்ந்த நிகழ்வு நடைபெற இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ள நான் லட்சக்கணக்கில் பணம் கேட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இச்செய்தி பலரால் பகிரப்படுகிறது. "இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது குறித்த தகவல் கூட எனக்குத் தெரியாது. அதில் கலந்துகொள்ளும்படி யாரும் என்னை அணுகவும் இல்லை. "கலைஞர்கள் சாதி, மதம், மொழி போன்ற எல்லா எல்லைகளையும் கடந்தவர்கள். கலைத் துறையில் இருக்கிற நான் மதம் தொடர்பாக நடக்கிற ஒரு நிகழ்வில் நிச்சயம் கலந்து கொள்ள சம்மதித்து இருக்க மாட்டேன்.

"சமூக வளர்ச்சி, மாற்றம், விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வுகளில் ஆர்வமாக கலந்துகொள்கிற நான், அதற்காக எப்போதும் பணம் பெற்றதில்லை. பணம் வாங்கிக்கொண்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கூடாது என்கிற கொள்கை உடையவன் நான். அப்படி இருக்க, ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் பணம் கேட்டதாக வந்த செய்தியில் துளியளவும் உண்மையில்லை.

"இது போன்ற செய்திகள் வருவது வருத்தமளிக்கிறது. என் மீது அன்பு கொண்ட அனைவருக்கும் என் வேண்டுகோள் இதுதான். இனி இது போன்ற தவறான நோக்கத்தில் பரப்பப்படும் செய்திகளைப் புறக்கணித்து, எனது நல்ல முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்," என கோரியுள்ளார் சூர்யா. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற பல்வேறு விவாதங்க ளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!