பெரிய நடிகர்களை வைத்து படம் தயாரிக்க மீனா திட்டம்

பல படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமான மீனா இப்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க இருக்கிறார். தமிழ்ச் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர் கூட்டமே உண்டு. திருமணத்திற்குப் பிறகு இவர் நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்தார். அண்மையில் வெளியான ‘தெறி’ படத்தில் விஜய் மகளாக மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். அவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், மீனா தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் கமல்ஹாசன்உள்ளிட்ட மூத்த நடிகர்களின் படங்களையும் மகேஷ்பாபு, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களையும் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி- யுள்ளன.