வடிவேலுவால் வில்லனாகும் ராஜேந்திரன்

வில்லனாக பாலாவால் அறிமுகப் படுத்தப்பட்ட 'நான் கடவுள்' ராஜேந்திரன், 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். அதனைத்தொடர்ந்து நகைச் சுவை கதாபாத்திரத்தில் நடிக்கும் பல வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. அந்த நேரம் பார்த்து வடிவேலு, சந்தானம் போன்ற நடிகர்கள் நாயகனாக நடித்ததால், ராஜேந் திரனுக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைத்தன. 'வேதாளம்', 'தெறி' என முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்துவிட்டார்.

ஒரு கட்டத்தில் அவர் தனது சம்பளத்தை உயர்த்தினார். அதன் விளைவாக, இப்போது அவருக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன. அதோடு வடிவேலு மீண்டும் களமிறங்கியிருப்பதும் அவருக்கு ஒரு சறுக்கல்தான் என்கிறார்கள். அதனால், இனிமேல் நகைச்சுவை கதாபாத்திர வாய்ப்புகளுக்கு மட்டும் காத்திருக்காமல், வில்லனாகவும் நடிக்க முடிவு செய்திருக்கிறார் ராஜேந்திரன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!