ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பு

தமிழக முதல்வராக ஆறாவது முறையாக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார் 68 வயதான ஜெயலலிதா. சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா நண்பகல் 12.06 மணிக்கு ஜெயலலிதா வுக்குப் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து, இரு மருத்துவர்கள், மூன்று வழக்கறிஞர்கள், ஆறு முதுகலைப் பட்டதாரிகள் அடங்கிய 28 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது. சுமார் அரைமணி நேரத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி முடிய, 12.35 மணியளவில் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தை அடைந்து தமது முதல் நாள் பணிகளைத் தொடங்கினார் ஜெயலலிதா.

அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்த லில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 134 இடங்களில் வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. திமுக கூட்டணி 98 தொகுதிகளைக் கைப்பற்றி பலம்பொருந்திய எதிர்க் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதுவரை இல்லாத ஒன்றாக திமுக பொருளாளர் ஸ்டாலின், பொன்முடி, மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர், சேகர்பாபு போன்ற திமுக எம்எல்ஏக்களும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலைக்கு அச்சாரமாகக் கருதப்படுகிறது. ஆயினும், "தேர்தலில் தோற்ற சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமாருக்கு முன்வரிசையில் இடமளித்து விட்டு ஸ்டாலினை கூட்டத்தோடு கூட்ட மாக அமரவைத்ததைப் பார்க்கும்போது ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை என்பதையே காட்டுகிறது," என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், கம்யூ னிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் ஆகியோ ரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். ஜெயலலிதா சென்ற வழியெங்கிலும் அவரை வாழ்த்தி, வரவேற்கும் விதமாக ஒரு பதாகைகூட வைக்கப்படாதது வியப் புக்குரிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. இதனிடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, "தமிழகத்தின் வளர்ச்சிக் காக புதிய அரசாங்கத்துடன் மத்திய அரசு அணுக்கமாக இணைந்து செயல்படும்," என்று டுவிட்டர் சமூக வலைத்தளம் வழியாகத் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!