விஜய் பாராட்டு: குளிர்ந்துபோன கீர்த்தி

பாபி சிம்ஹாவுடன் இணைந்து 'பாம்புசட்டை', சிவகார்த்திகேயன் ஜோடியாக 'ரெமோ', தனு‌ஷுடன் இணைந்து 'தொடரி' என்று செம பரபரப்பாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், பரதன் இயக்கும் 'விஜய் 60' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார். படப்பிடிப்பின்போது பொதுவாக கதாநாயகிகளுடன் அரட்டை அடிக்கும் வழக்கம் விஜய்க்கு இல்லை. ஆனால், அவராகவே கீர்த்தியைப் பார்த்து பாராட்டி பேசினாராம்.

"உங்களைப் பற்றி நல்லவிதமாக நிறைய கேள்விப்படுகிறேன். திரையுலகில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. உங்கள் நடிப்பு நன்றாக உள்ளது. உங்களால் நிச்சயமாக பெரிய நடிகையாக உருவாக முடியும். அதற்கு முன்கூட்டியே எனது வாழ்த்துக்கள்," என்று விஜய் பேசிக்கொண்டே போக குளிர்ந்து போய்விட்டார் கீர்த்தி. இப்போது பார்ப்பவர்களிடம் எல்லாம் விஜய் புராணத்தைத் தொடங்கி விடுகிறாராம் அம்மணி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!