‘சைமா’ நியமனங்கள் தொடக்கம்

தென்னிந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருத்த 'சைமா' விருதுகளுக்கான நியமனப் பட்டியல் வெளியாகிவிட்டது. சைமா விருதுகளுக்கான சிறந்த நடிகர், நடிகையர், இயக்குநர், திரைப்படத்தை நீங்களே தேர்ந்தெடுக்கும் நேரம் தொடங்கிவிட்டது. தமிழ்ப் பிரிவில் காக்கா முட்டை, தனி ஒருவன், ஐ, ஓகே கண்மணி, நானும் ரௌடிதான் ஆகிய திரைப்படங்கள் சிறந்த திரைப்படத்துக்காக நியமிக்கப்பட்டுள்ளன. 'சைமா' எனும் தென்னிந்திய அனைத் துலகத் திரைப்பட விருது விழா இவ்வாண்டு ஜூன் 30ஆம் தேதியும் ஜூலை 1ஆம் தேதியும் சிங்கப்பூரின் சன்டெக் சிட்டியில் நடை பெறுகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகையர், இயக்குநர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கிறது 'சைமா' விருது நிகழ்ச்சி.

அனுபவமிக்க நடுவர் குழுவால் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் பலதரப்பட்ட பிரிவுகளில் சிறந்த ஐந்து கலைஞர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டு விருதுகளுக்காக நியமிக்கப் படுவார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளரை ரசிகர்களே தேர்ந்தெடுப்பார்கள். இவ்வாண்டு ஆக அதிகமான பிரிவுகளில் நியமிக்கப்பட்ட திரைப்படங்களில் 'ஓகே கண்மணி', விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரௌடிதான்' ஆகிய திரைப்படங்கள் தமிழ்ப் பிரிவில் முன்னணி வகிக்கின்றன. தெலுங்குப் படப்பிரிவில் 'பாகு பலி', 'ஸ்ரீமத்துடு', கன்னடத்தில் 'கெண்டசம்பிகே', 'ராங்கி தரங்கா', மலையாளத்தில் 'பிரேமம்', 'என்னு நிந்தே மௌய்தீன்' ஆகிய திரைப்படங்களும் பல பிரிவுகளில் நியமனங்களைப் பெற்றுள்ளன.

தமிழில் மணிரத்னம் இயக்கிய 'ஒகே கண்மணி' திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர் என மொத்தம் 9 பிரிவுகளில் நியமனங்களைப் பெற்றுள்ளது. அதே போல தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' மொத்தம் 11 பிரிவுகளில் நியமனங்களைப் பெற்றுள்ளது. கன்னடத்தில் 'கெண்டசம்பிகே' மொத்தம் 10 நியமனங்களையும் மலையாளத்தில் 'பிரேமம்' திரைப்படம் ஆக அதிகமாக 14 நியமனங்களைப் பெற்றுள்ளன. ரசிகர்கள் www.siima.in எனும் 'சைமா' இணையப்பக்கத்துக்குச் சென்று ஒவ்வொரு பிரிவிலும் வாக்களிக்கத் தொடங்கலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!