அனைவர் வாழ்விலும் காதல் உரசிச் செல்லும் சிம்பு - நயன்

'இது நம்ம ஆளு' படத்தில் இடம்பெற்றுள்ள சிம்பு - நயன்தாராவின் காதல் காட்சிகள் நடிப்பு மாதிரி தெரியவில்லை என்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். இவரது இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் 'இது நம்ம ஆளு'. இப்படம் இன்று படம் வெளிவருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இருவரது காதல் காட்சி கள் குறித்து பாண்டிராஜ் அழகாக விவரித்துள்ளார். "மனிதர்களாக பிறந்த ஒவ்வொரு வரும் ஏதாவது ஒரு தருணத்தில் காதலைச் சந்தித்திருப்பார்கள். விடலைப் பருவத்திலோ, பணிபுரியும் இடத்திலோ, நடுத்தர வயதிலோ, ஏதாவது ஒரு கட்டத்தில் சட்டென்று காதல் உரசிப் போயிருக்கும்.

"சட்டென்று பூக்கும் பூவைப்போல மின்னலைப்போல எந்த நொடியில் காதல் தோன்றும் என்பதைச் சொல்ல முடியாது. அந்தக் காதலை மையக் கருத்தாகக் கொண்டு நான் செதுக்கி உள்ள திரைப்படம் இது. "தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் தம்பதியர்களின் காதல் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எனக்குள் வெகு நாட்களாக இருந்து வந்தது. எனது அந்தத் தேடலின் முயற்சி தான் இந்த 50 விழுக்காடு நகைச்சுவையும் 50 விழுக் காடு காதலும் கொண்ட அழகான படைப்பு. "படத்தில் நாயகன் நாயகியாக நடித்த சிம்பு, நயன்தாராவிற்கு நான் காதல் காட்சிகளைச் சொல்லித் தர வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவர்கள் இருவரின் சிரிப்பு, காதல் பார்வை, செல்லக் கோபம் என அனைத்தும் படத்தின் காதலுக்கான உடல்மொழியின் முதுகெலும்பாக அமைந்துள்ளது. "மொத்தத்தில் இருவரது காதல் காட்சிகள் யாவும் நடிப்பு போலவே இல்லை; பத்து ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இணைந்து நடிக்கும் இந்தப் படம், எது மாதிரியும் இல்லாமல், புது மாதிரியும் இல்லாமல், ஒரு மாதிரியாக இருக்கும்," என்று புன்னகையுடன் விவரிக்கிறார் பாண்டிராஜ்.

'இது நம்ம ஆளு' படத்தில் சிம்பு, நயன்தாரா

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!