கேரள புதுவரவு மிர்துளாவின் ஆசை

கேரளாவில் இருந்து வந்து வாய்ப்புத் தேடி வந்த மிர்துளா, தமிழில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயனுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ்ப்பட உலகில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில் பலர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கேரளாவில் இருந்து வந்த நயன்தாரா இப்போது தமிழில் முதல் இடத்தில் இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் புதிய வரவுகளில் முக்கிய இடம் பிடித்து இருக்கிறார். இன்னும் பலர் தமிழில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது மிர்துளாவும் தமிழ்த்திரையு லகில் காலடி எடுத்து வைக்கிறார்.

"குழந்தைப் பருவத்தில் இருந்தே நடிகை ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் வளர்ந்தேன். தமிழ் ரசிகர்கள் நடிகைகள் மீது காட்டும் அன்பு என்னை வியக்க வைக்கிறது. "நான் கேரளாவில் திரையிடப்படும் தமிழ்ப் படங்களை தவறாமல் பார்ப்பேன். விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரின் வித்தியாசமான நடிப்பு என்னைக் கவர்ந்துள்ளது. இருவரும் தேர்வு செய்யும் கதைகள் மிக நன்றாக உள்ளன. அவர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. நல்ல நேரமும் அதிர்ஷ்டமும் இருந்தால் அந்த வாய்ப்பு எனக்கு அமையும்," என்கிறார் மிர்துளா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!