ரசிகர்களையும் ‘ஹேப்பி’ ஆக்குங்கள் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி தொடர்ந்து பல படங்களில் நடித்து வரு­கிறார். படத்­திற்­குப் படம் அவ­ருக்கு நல்ல வர­வேற்பு கிடைத்து வரு­கிறது. அவ­ருடைய படங்களைப் பார்க்க ரசி­கர்­கள் குடும்பத்­து­டன் திரை­ய­ரங்­கிற்­குச் செல்ல ஆரம்­பித்­தி­ருக்­கின்ற­னர். மேலும் அவ­ருக்கு 'மக்கள் செல்வன்' என்ற பட்­டப்­பெ­ய­ரும் கொடுத்து இருக்­கின்ற­னர். இத்­தகைய நல்ல பெயர் இருக்­கும்­போது அவரின் ரசி­கர்­கள் மனம் புண்­படும்படி அவர் நடந்­து­கொண்ட­தாக ஒரு செய்தி வெளியாகி இருக்­கிறது. காரைக்­குடி அருகில் கானா­டு­காத்­தான் என்ற கிரா­மத்­தில் 'றெக்க' என்ற படத்­தில் நடித்து வரு­கிறார் விஜய் சேதுபதி. அவ­ருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் லட்சுமி மேனன். காரைக்­கு­டிக்கு வந்த சில சுற்­று­லாப் பய­ணி­கள் கானாடுகாத்­தா­னில் உள்ள கோயி­லுக்­குச் சென்­றுள்­ள­னர். அப்போது கோயில் மூடப்­பட்­டி­ருந்தது.

அதனால் அவர்­கள் அருகில் நடை­பெ­றும் 'றெக்க' படப்­பி­டிப்பைப் பார்க்­கச் சென்­றி­ருக்­கின்ற­னர். ஆனால் அங்கு போய் விஜய் சேது­ப­தியை சந்­தித்­துப் புகைப்­ப­டம் எடுத்­துக்­கொள்ள இவர்­கள் ஆர்வம் காட்­டி­ய­போது அவர் கண்டு கொள்­ள­வில்லை­யாம். அதைவிட வய­தா­ன­வர்­கள் என்று கூடப் பாராமல் கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்­கார்ந்து நடிகை­யு­டன் கடலைப் போட்டுக் கொண்டிருந்தாராம். அதனால் அவரைப் பார்க்­கச் சென்ற­வர்­கள் அதி­ருப்தி அடைந்து கிளம்பிவிட்­ட­ன­ராம். "பெரிய பெரிய நடி­கர்­களை எல்லாம் பார்த்­திருக்கிறோம். இப்படி யாருமே நடந்த­தில்லை. நம்மைப் பார்க்க வந்த ரசி­கர்­கள் என்று பாசத்­தோடு பேசு­வார்­கள். புகைப்­ப­டம் எடுக்க அனு­ம­திப்­பார்­கள். இவர் இப்படி மரியாதை இல்­லா­மல் நடந்து கொள்­கிறாரே," என்று புலம்­பி­யி­ருக்­கின்ற­னர். 'குமுதா'வை மட்டும் அல்­லா­மல் ரசி­கர்­களை­யும் 'ஹேப்பியா' வச்­சுக்க வேணாமா அண்­ணாச்சி?' என்று கேட்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!