அதிக படங்களில் சிவகார்த்திகேயன்

‘ரஜினி முருகன்’ படத்தை முடித்த கையோடு ‘ரெமோ’ படத்தில் நடிக்கத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் அந்தப் படத்திலும் அவருக்கு ஜோடியாக மீண்டும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதனால் இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களைவிட இப்படம் மிகப்பெரிய வரவுசெலவுத் திட்டத்தில் தயாராகியிருக்கிறது. தற்போது அப்பட வேலைகள் முடிந்ததை அடுத்து மோகன்ராஜா இயக்கும் படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கத் தொடங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். மேலும், இதுவரை ஒரு படத்தில் நடித்து முடித்ததும் அடுத்த படம் என்கிற ரீதியில் செயல்பட்டு வந்த இவர், தற்போது சில நடிகர்கள் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பதைப் பார்த்து (உதாரணத்திற்கு விஜய் சேதுபதி) தனது வேகத்தையும் அதிகப்படுத்தியுள்ளார்.

அதாவது மோகன்ராஜா படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, வருத் தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கும் படம் இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க தேதிகள் கொடுத்துள்ள சிவகார்த்திகேயன், அதைத் தொடர்ந்து நடிக்க மேலும் சில கதைகளையும் கேட்டு வைத்திருக்கிறார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘சைமா’ விருதைப் பெற்ற ஜெயம் ரவி, அவரது மகன் ஆரவ், தனுஷ், அனிருத் உள்ளிட்டோர்.

20 Aug 2019

சிறந்த நடிகர், நடிகையாக தனுஷ், திரிஷாவுக்கு விருது