கலையரசனுக்கு ஜோடியான ஜனனி

'மெட்ராஸ்' படம் மூலம் புகழ் பெற்ற கலையரசன் நடிக்கும் புதிய படத்தில் ஜனனி ஐயர் கதாநாயகியாக நடிக்க உள்ளார். கார்த்தி நடிப்பில் வெளியான 'மெட்ராஸ்' படம் மூலம் புகழ் பெற்றவர் கலையரசன். இந்தப் படத்தில் கலையரசனின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. இப்படத்தை அடுத்து 'டார்லிங் 2' படத்தில் நடித்தார். இப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது.

இவர் அடுத்ததாக புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக 'அவன் இவன்', 'தெகிடி' ஆகிய படங்கள் மூலம் புகழ் பெற்ற ஜனனி நடிக்கிறார். சி.வி.குமார் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். "காதல், நகைச்சுவையை மையப்படுத்தி இப்படம் உருவாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் தொடங்க உள்ளது. இதில் எனக்கான கதாபாத்திரம் நன்றாக அமைக்கப்பட்டுள்ளது. அதனால் படப்பிடிப்பு துவங்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்," என்கிறார் ஜனனி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!