நெகிழ வைத்த விஜய்சேதுபதி

பொதுவாக தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகத்திலும் பந்தாவுக்கும் பகட்டும் குறைவே இருக்காது. முன்னணிக் கலைஞர்கள் என்றாலே ஒருவித அலட்டலும் ஆடம்பரமும் இருக்கும். தாம் படப்பிடிப்புக்கு வரும்போது இயக்குநரே ஓடி வந்து கதவைத் திறந்துவிட வேண்டும் என்று கூறிய கதாநாயகர்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

“என்னை நேரில் கண்டதும் வணக்கம் தெரிவிக்கவில்லை. அதனால் படப்பிடிப்பை ரத்து செய்யுங்கள்,” என்று ஒரு கதாநாயகன் கூறியதால் முன்பு பெரிய சர்ச்சை உண்டானது. இங்கு எல்லா அலட்டல்களையும் வைத்த கண் வாங்காமல் உள்வாங்கும் துணை நடிகர் கள் தினமும் தங்கள் நிலையை நினைத்து வேதனையுடன் அங்கலாய்த்துக் கொள்வர். ஆனால் அவர்களின் கண்களுக்கு விஜய் சேதுபதி மட்டும் சற்று விசித்திரமாகத் தென்படுகிறார். ஏன்? விஷயம் அப்படி!

தன்னுடன் நடிக்கும் துணை நடிகர்களிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினால் கூட நம் மதிப்பு என்னாகும்? என்று நினைப்பவர்களுக்கு மத்தியில், விஜய் சேதுபதி நேர்மாறாக நடந்து கொள்கிறார். கூட்டத்தில் பின்னால் நிற்கும் சாதாரண தினக்கூலி நடிகர், நடிகைகளிடம் அவர் பழகும் விதம் சொல்லில் அடங்கா விசித்திரம் என்கிறார்கள் கோடம்பாக்கத்துப் புள்ளிகள்.

‘ஆண்டவன் கட்டளை’ படப்பிடிப்பில் நடந்த சம்பவம் இது. துணை நடிகைகளில் சிலர், காட்சி இல்லாத நேரத்தில் முந்தானையில் முடிந்து வைத்திருந்த கடை முறுக்கு, இலந்தை பழம் உள்ளிட்ட சமாச்சாரங்களை எடுத்து கடித்துக் கொண்டிருந்தார்களாம். சட்டென்று அவர்களை நெருங்கி வந்த விஜய் சேதுபதி, ‘நானும் ரொம்ப நேரமாக கவனிக்கிறேன். முந்தானையில் இருந்து எடுத்து நீங்கள் மட்டுமே சாப்பிடுறீங்க... எனக்குத் தர மாட்டீர்களா?’ என்று உரிமையோடு கேட்ட துடன், சட்டென அந்த முறுக்கை வாங்கிக் கடித்தாராம். துணை நடிகைகள் பதறிப் போயிருக்கிறார்கள்.

“அவர் எவ்வளவு பெரிய நடிகர். நம் மிடம் அவர் சகஜமாகப் பேசுவதே பெரிய விஷயம். இதில் நாம் வைத்திருக்கும் சின்ன முறுக்கை கூட பேதம் பார்க்காமல் வாங்கிச் சாப்பிடுகிறாரே?” என்று அவர்கள் நெகிழ்ந்து போயிருக்கிறார்கள். “அவர் அப்படித்தான். இவ்வளவு உயரத்திற்கு வந்த பின்பும் மாறாமல் இருப்பதுதான் அவர் பாணி. இதே படப்பிடிப்பின்போது திடீரென கண்வலியால் ரொம்பவும் அவதிப்பட்டார் சேதுபதி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்