மீண்டும் இரட்டை வேடங்களில் விஜய்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் அவருக்கு இரட்டை வேடங்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. 'தெறி'யைத் தொடர்ந்து பரதன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அவ ரது ஜோடியாக கீர்த்தி சுரே‌ஷும், நகைச்சுவை வேடத்தில் சதீ‌ஷும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் இப்படத் தில் இரட்டை வேடங்களில் நடிப்ப தாகக் கூறப்படுகிறது. ஒரு வேடத் தில் திருநெல்வேலி வட்டார மொழியில் பேசுபவராகவும், மற்றொரு வேடத்தில் மொட்டையடித்த தோற்றத்துடனும் விஜய் நடித்து வருகிறாராம்.

வில்லன்களாக டேனியல் பாலாஜி, ஜெகபதி பாபு, ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் மைம் கோபி, ஸ்ரீமன், ஒய்.ஜி.மகேந்திரனும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப் பிடிப்பு அண்மையில் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத், ராஜமுந்திரி பகுதி களில் ஜூன் மாதம் நடத்திட படக்குழு திட்டமிட்டுள்ளது. முன்னதாக பரதன் இயக்கத் தில் 'அழகிய தமிழ் மகன்', ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'கத்தி' ஆகிய படங்களில் விஜய் இரு வேடங்களில் நடித்திருந்தார். இதில் 'கத்தி' மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் மீண்டும் இரட்டை வேடங்களில் நம்பிக்கை யுடன் நடித்து வருகிறார் விஜய்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!